தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பதவி விலகவுள்ள தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­கள்…

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை நடத்­து­வது தொடர்­பில்  நெருக்­கடியை  கொடுத்­தால் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ள்  பதவி விலக  முடிவு செய்­துள்­ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­ப­டும் அர­சி­தழ் அறி­விப்பு நேற்­று­முன்­தி­னம் வெளி­யி­டப்­பட்­டது.

அதில் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் ஜன­வரி 5ஆம் திகதி நடத்­தப்­ப­டும் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அரச தலை­வ­ரின் திடீர் அறி­விப்­பை­ய­டுத்து தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும், தேர்­தல்­கள் செய­ல­கத்­தில்  ஒன்றுகூடி   கலந்­து­ரை­யா­டியுள்ளனர்.

இதன்போது  ஜனாதிபதி அர­ச­மைப்­புக்கு முர­ணா­க  நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­துள்­ளதாகவும், அதனால்,  அர­ச­மைப்­புக்கு முர­ணாக தேர்­தல் நடத்த முடி­யாது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இது தொடர்பில் உயர் நீதி­மன்­றத்­தில் பல தரப்­பும் வழக்­கு­க­ளைத் தாக்­கல் செய்­ய­வுள்­ள­தா­கக் கூறு­கின்­றன.

எனினும் உயர் நீதி­மன்­றம் வழங்­கும் தீர்ப்பை கவ­னத்­தில் எடுத்­துச் செயற்­ப­ட­வேண்­டும் என்­பதை ஆணைக்­கு­ழு­வின் மூன்று உறுப்­பி­னர்­க­ளும் ஏற்­றுக் கொண்­டுள்­ள­னர்.

இதே­வேளை, ஆணைக்­கு­ழு­வின் உறுப்­பி­னர்­கள் மூவ­ரை­யும் பதவி நீக்­கம் செய்­வ­தற்­கும் இர­க­சிய நட­வ­டிக்­கை­கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளது

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை அர­ச­மைப்;புக்கு முர­ணாக நடத்­து­மாறு பணிக்­கப்­பட்­டால் அல்­லது அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­பட்­டால் பதவி துறப்­பேன் என்று ஆணைக்­குழு உறுப்­பி­னர் ஒரு­வர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன்­போது, யாரா­வது ஒரு­வர் பதவி துறக்­கும் முடிவை எடுத்­தா­லும், மூன்று உறுப்­பி­னர்­க­ளும் பத­வி­யைத் துறப்­பது என்று தீர்­மா­னித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...