தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பருவநிலை மாற்றத்தினால் பூமி சுற்றும் வேகம் குறைகிறது : விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

global-warmingபருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், கடல் நீர் மட்டம் அதிகரித்து அதன் மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து ஆராய்ச்சி செய்த கனடாவின் அல்பெர்டா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் மேத்யூ டம்பெரி ஆகியோர்,பூமியின் வெப்பம் அதிகரித்து அதன் மூலம் துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் உருகி வருவதால் கடல் நீர்மட்டம் அதிகரித்து அதன்மூலம் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

துருவப் பகுதிகள் உருகி வருவதால், துருவங்களின் அடர்த்தி குறைந்து வருகிறது அது மட்டுமல்லாது நிலவின் ஈர்ப்பு சக்தியும் குறைந்து வருகிறது. இவை இரண்டுமே பூமியை மெதுவாக சுழலச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Comments
Loading...