தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பலாலி விமான நிலையத்தில் இருந்து விரைவில் வெளிநாட்டிற்கு விமானசேவை…

யாழ். பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் குறித்த விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக  கூறப்பட்டுகின்றது.

இந்திய அரசாங்கம் நிதியுதவியுடன் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் இருந்து நேரடியாக இந்தியாவிற்கான விமான சேவை நடத்தப்படுமாக இருந்தால், வடமாகாணத்துக்கான வருவாயும் அதிகரிக்கும் என்பதோடு, வடக்கில் இருந்து இந்தியா செல்வோரின் செலவுகள்  குறைவடையும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், விரைவில் இந்திய விமான சேவைகள் குழு  பலாலிக்கு சென்று ஆய்வுகளை நடத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை , பலாலியில் இருந்து மலேசியாவிற்கான விமான சேவையும் நடத்தப்படும் எனஉம் அரசாங்கத்தகவல்கள்  தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...