தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தானில் பாலம் கட்டியவர்கள் மீது துப்பாக்கி சூடு

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாலம் கட்டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்தித் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தினர். வெளியிடங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பதால் இவர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.nocredit

இந்த தொழிலாளர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பலுசிஸ்தான் விடுதலை முன்னணி என்ற அமைப்பு இந்த தாக்குதலை தாம் நடத்தியதாக உரிமை கொரியுள்ளது.

பாகிஸ்தான் இராணுவமும், அதனால் முன்னேடுக்கப்படும் கட்டுமானத் திட்டங்களுக்காக வேலை செய்வோரும், தமது இலக்கு என்று அந்த பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

பலூச் தேசியவாசிகளை இராணுவம் சித்ரவதை செய்வதாகவும், கொல்வதாகவும் பிரிவினைவாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்கவே தாம் நடவடிக்கைகளை முன்னேடுப்பதாக இராணுவம் தெரிவிக்கிறது.

Comments
Loading...