Designed by Iniyas LTD
பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கட்டண அறிவிப்பை ரத்து செய்யவேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பணப் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: பெரு நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ரூ. 5 ஆயிரமும், நகர்ப்புறங்களில் வசிப்போர் ரூ. 3 ஆயிரமும், புறநகர் பகுதிகளில் வசிப்போர் ரூ. 2 ஆயிரமும், கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ. 1,000 கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அபராதம் வசூலிக்கப்படும்.
அதுபோல கூடுதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இது ஏழை மக்களையும், சில்லறை வணிகர்களையும் கடுமையாக பாதிக்கும். வங்கிகள் சேமிப்புக்கானது, சுயசார்புக்கானது, எளிய மக்களின் பணப் புழக்கத்துக்கானது என்ற அடிப்படை நோக்கத்தையே இந்த அறிவிப்பு தகர்க்கிறது.
எனவே, இந்த அறிவிப்புகள் அனைத்தையும் ரத்துசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.