தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாரதிய ஜனதா அரசு ஊழலை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை – அண்ணாஹசாரே

கறுப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக சமூக சேவகர் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.anna_hazare

மகராஷ்டிர மாநிலம் ரலேகான் சித்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை பதவியேற்ற 100 நாட்களில் மீட்பதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை மத்திய அரசு, அதனை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

பாரதிய ஜனதா அரசு ஊழலை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார். சட்டங்களை மீறி அரசு செயல்படுவதாக கூறிய அவர், அரசே சட்டத்தை பின்பற்றாத போது, மக்கள் எப்படி அதனை பின்பற்றுவார்கள் என கேள்வி எழுப்பினார். கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி ஆகிய இருவரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் ஹசாரேவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, அரசியல் குறித்துப் பேச விரும்பவில்லை என அண்ணா ஹசாரே பதில் அளித்தார்.

Comments
Loading...