Designed by Iniyas LTD
பிரபாகரன் காலத்தில் மக்கள் அச்சப்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ புகழராம்
அரசியல் தலைவர்களின் அதிகார போட்டித்தன்மையினால் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டது. இதன் தாக்கத்தை நாட்டு மக்களே இன்று எதிர்க் கொண்டுள்ளார்கள். மத அனுஸ்டானங்களில் ஈடுப்படவும் முக்கிய பண்டிகைகளை கொண்டாடவும் முடியாத அச்ச நிலை தற்போது காணப்படுகின்றது. பிரகாகரனின் காலத்தில் கூட நாட்டு மக்கள் இவ்வாறான நிலைமைக்கு தள்ளப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.