Designed by Iniyas LTD
பிரான்ஸ் செயற்பாட்டாளர் மீது சிங்கள கைகூலிகள் மீண்டும் தாக்குதல்!
பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் மீது மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர் சிங்களக் கைக்கூலிகள். இன்று பிரான்சில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் பிரான்ஸ் தமிழீழ விளையாட்டுத்துறைச் சம்மேளன தலைவர் மீதும், விளையாட்டுத்துறை பொறுப்பாளர் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன
பிரான்ஸ் தமிழீழ விளையாட்டுத்துறைச் சம்மேளத் தலைவர் அவரது வீட்டுக்கு முன்பாக காத்திருந்த தாக்குதலாளிகளால் கடுமையாகத் தலையில் பலத்த தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் 21 கழகங்கள் பங்குபற்றி நடைபெற்றக்கொண்டிருந்த மாவீர வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியைக் குழப்பும் நோக்கில் இதே சிங்களக் கைக்கூலிகளில் மற்றொரு குழு நடத்திய தாக்குதலில் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரான சுதர்சன் காயமடைந்துள்ளார்.
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மீது பிரான்சில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. செயற்பாட்டாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துதல், வாளால் வெட்டுதல், கம்பிகளால் தாக்குதல், கும்பலாகத் தாக்குதல் என வன்முறைகளை இக்குழு நடத்தி வருகிறது.

நாதன், கஜன் படுகொலை, பருதி மீதான வாள்வெட்டு மற்றும் படுகொலை, பரமலிங்கள் மீதான வாள்வெட்டு, படுகொலை முயற்ச்சி, மேத்தா மீதான தாக்குதல்கள், தற்போது விளையாட்டுத்துறை சார்ந்தவர்கள் மீதான தாக்குதல்கள் என வன்முறைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.