Designed by Iniyas LTD
பிலிப்பைன்ஸில் இனந்தெரியாதோரால் 7 பேர் சுட்டுக்கொலை!
பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் இடங்களில் பல்வேறு வாக்குசாவடிகள் பதற்றமானவை என தேர்தல் அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டு அந்த வாக்குசாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கவித் மாகாணத்தில் உள்ள ரோஷாரியோ என்ற இடம் அரசியல் போட்டி நிலவும் பதற்றம் நிறைந்த நகராகும். நேற்று அதிகாலையில் அந்த பகுதியில் வாகனங்கள் சில அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு பதுங்கி இருந்த மர்மநபர்கள் சிலர் அந்த வாகனங்களை குறிவைத்து சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒரு ஜீப் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் என 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு முன் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வராத போதிலும், இது தேர்தல் வன்முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.