தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பீட்டர்சன் இல்லாத எந்தவொரு இங்கிலாந்து அணியும் வலிமையானது அல்ல – கிளார்க்

பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணி பலவீனமானது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித்தலைவர் மைக்கல் கிளார்க் தெரிவித்துள்ளார்.pietersen_clarke

இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்ட  பீட்டர்சன் தற்போது அந்த அணியில் இடம் பிடிக்க போராடி வருகிறார்.

அண்மையில் கவுண்டி போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட பீட்டர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் இங்கிலாந்து அணியின் முகாமையாளர் ஸ்டிராஸ் பீட்டர்சனுக்கு மீண்டும் இடம் இல்லை என்று மறுத்துள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விரைவில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் விளையாட இருக்கிறது.

இது குறித்து கிளார்க் கருத்து வெளியிடுகையில்,

பீட்டர்சன் விவகாரம் குறித்து எனக்கு இரண்டு கருத்துகள் உள்ளது.

முதல் கருத்து, பீட்டர்சனுக்காக நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால் அவருடன் எனக்கு ஒரு நல்ல தொடர்பு உண்டு.

இங்கிலாந்து அணியில் அவர் விளையாடுவதை பார்க்க நான் விரும்புகிறேன். அவருடைய விளையாட்டு திறமை தற்போது சிறப்பாக உள்ளது.

தற்போது வரை அவர் சிறந்த வீரர். அவர் விளையாட விரும்புகிறார் என்று எனக்குத் தெரியும். இதனால் அவர் இங்கிலாந்து அணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

மற்றொரு பக்கத்தில் இருந்து கூறும்போது, இங்கிலாந்து எதிராக ஆஷஸ் தொடரில் விளையாட விரைவில் அங்கே செல்ல இருக்கிறோம்.

பீட்டர்சன் இல்லாத எந்தவொரு இங்கிலாந்து அணியும் வலிமையானது என்று எனக்கு தோன்றவில்லை. பீட்டர்சனைப் பற்றி அவரது புள்ளி விவரங்களே பேசும்.

நீண்ட காலமாக சிறப்பாக விளையாடும் சிறந்த வீரர் அவர். இதுவரை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த நிலையுடனே உள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

2013-14ம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணி 5-0 என இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

இதில் இங்கிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்கள் குவித்தவர் பீட்டர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...