தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய கட்சி உருவாக்கத்தால் அச்சமடையும் மைத்திரி – ரணில்

புதிய கட்சியை உருவாக்க முனைவதைக் கண்ட மைத்திரி – ரணில் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய பசில் ராஜபக்ச ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.basil

நாட்டு மக்களின் பிரதான பிரச்சனையாக அதிகரிக்கப்பட்டுள்ள வரி விதிப்புக்கள் மாறியுள்ளதாக தெரிவித்துள்ள பசில் ராஜபக்ச, எனினும் புதிய கட்சி உருவாக்கமே அரசாங்கத்தின் பிரதான பிரச்சினையாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்சியில் யார் அங்கம் வகிக்கப்போகின்றனர், யார் அதன் தலைவர், அதன் சின்னம் என்ன என்பதே அரசாங்கத்தின் பிரதான பிரச்சனை என்றும் குறிப்பிட்டுள்ள பசில் ராஜபக்ச, நாட்டு மக்களின் அவசர பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே புதிய கட்சியை தாம் உருவாக்கத் திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் புதிய கட்சிகளுக்கு அஞ்சுவதை விடுத்து மக்களுக்கு அஞ்சி மக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள பசில் ராஜபக்ச, எதிர்வரும் ஒக்டோபர் எட்டாம் திகதி இரத்தினபுரியில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டம் புதிய கட்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் கூட்டமல்ல என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...