தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பில் 17 ஏக்கர் காணியில் படையினர் நிலை கொண்டுள்ளார்கள்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான 17 ஏக்கர் காணி சட்டப்படி தமக்கு உரித்தாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தமக்கு வழங்கியுள்ளதாகவும் படை அதிகாரி தெரிவித்துள்ளார். மாவட்டத்திற்கான அபிவிருத்திக் குழு கூட்டம் நேற்று முன்தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.land

இதன்போது இந்த காணி தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது  புதுக்குடியிருப்பு புதுப்புலவு பகுதியில் புதுப்புலவு சங்கத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் காணி உள்ளிட்ட 17 ஏக்கர் காணியில் படையினர் நிலையாக நிலைகொண்டுள்ளார்கள் இதில் இருந்து படையினர் வெளியேறி அந்த காணிகளை தமக்கு தரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதுதொடர்பில் அபிவிருத்தி குழு தலைவர் அங்கு கலந்துகொண்ட படை அதிகாரியிடம் கேள்விகேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த படை அதிகாரி சட்டப்படி 17 ஏக்கர் காணியும் படையினருக்கு உரித்தானது பாதுகாப்பு அமைச்சு ஊடாக படையினருக்கு அந்த காணி வழங்கப்பட்டுள்ளது.

Comments
Loading...