Designed by Iniyas LTD
புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் மற்றும் வடமாகாண ஆளுநருக்கு இடையில் சந்திப்பு..
புலம்பெயர்ந்து வாழும் சமூக ஆர்வலர்கள் வடமாகாண ஆளுநர் றெயினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
யாழ் சுண்டுக்குளி பழைய பூங்காவில் அமைந்துள்ள ஆளுநர் பங்களாவில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பிரான்ஸ், கனடா, ஜேர்மன், இலண்டன், அவுஸ்ரேலியா நாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு சென்றுள்ள அவர்கள் தாய் நாட்டின் தற்போதய அரசியல்,
பொருளாதார, சமூக முன்னேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வடமாகாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் என்பனவற்றினை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் அவர்கள் கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் இணைப்பு செயலாளர் சுந்தரம் டிவகல்லாலா வட மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து ஜனாதிபதியின் வடக்கு மற்றும் கிழக்குக்கான இணைப்பாளர் டொக்டர் கோல்டன் ஏஸ்எஸ்கே நிறுவனத்தின் தலைவர் எஸ்.எஸ்.குகநாதன்,
நண்பர்கள் நிறுவனத்தின் தலைவர் கே.செவ்வேள், நோத் லங்கா இன்சுட்ரூட் நிறுவனத்தின் பணிப்பாளர் பா.கோபாலகிருஸ்ணன் யாழ் வரவு லயன்ஸ் கழகத்தின் தலைவர் கிருபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிம்கப்பட்டுள்ளது

