தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெங்களூரில் தமிழ் நூலகம் உடைக்கப்பட்டதற்கு நெடுமாறன் கண்டனம்!

nedumaran-300x262பெங்களூரில் தமிழ் நூலகம் உடைக்கப்பட்டு பெறுமதியான நூல்கள் வீதியில் வீசப்பட்டுள்ளன. இந்த இனவாத செயல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது தொடர்பாக பழ நெடுமாறன் கண்டன அறிக்கையும் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்..

பெங்களூரில் 40 ஆண்டுகாலத்திற்கு மேலாக செயல்பட்டுவரும் திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகத்தை சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பூட்டை உடைத்துத் திறந்து 10ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் நூல்களை தெருவில் வீசிச் சென்ற செய்தி தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையறிந்த தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டு இச்செயலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகத்தை சிங்கள வெறியர்கள் தீயிட்டுக் கொளுத்தியதும், பெங்களூர் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்டிருப்பதும் தமிழர்களுக்கெதிரானத் திட்டமிட்ட பண்பாட்டு அழிவுச் செயலாகும்.
இதற்குக் காரணமான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு முன்வரவேண்டும். திருக்குறள் மன்றத்தைப் புதுப்பிக்கவும், சேதமான நூல்களை சீர்படுத்தவும் உதவ முன்வருமாறு  தமிழர்கள் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள
பழ.நெடுமாறன்

என அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...