Designed by Iniyas LTD
பெரும்பான்மை இன மீனவர்களை வேளியேறக்கோரி யாழில் நாளை பாரிய போராட்டம்
மருதங்கேணியில் அடாத்தாக தங்கியுள்ள பெரும்பான்மை இன மீனவர்களை வெளியேற்றக் கோரி நாளை யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டத்தினைவடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு கடற்றொழிலாளர் சமாசங்களின் ஒழுங்கமைத்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த போராட்டமானது யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தை முற்றுகையிட்டு நடத்தப்படவுள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியில் சுமார் 1500ற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை தொழில் செய்து வருகின்றனர்.
மேற்படி பெரும்பான்மையின கடற்றொழிலாளர்களை வெளியேற்றக்கோரி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் தொடர்ச்சியாக கேட்டுவருவதுடன், நேற்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சமாசத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.
