தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பெல்ஜியத்திலிருந்து ஐ எஸ் தீவிரவாதி நாடுகடத்தல்!

201604020522080507_Paris-militant-attack-deportation-to-france-Belgium-decision_SECVPFபிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் தொடர் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன.

130 பேர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களில் முக்கிய குற்றவாளி, சலா அப்தே சிலாம் (வயது 26) ஆவான்.

இவன் பெல்ஜியம் நாட்டில் பிரசல்ஸ் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தபோது, கடந்த மாதம் 18-ந் தேதி போலீசார் சுட்டு பிடித்தனர். அவனுக்கு அடைக்கலம் தந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அவனை கைது செய்த 4 நாட்களில்தான் பிரசல்ஸ் நகரில் விமான நிலையத்திலும், மேல்பீக் சுரங்க ரெயில் நிலையத்திலும் தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகளை நடத்தினார்கள். இதில் 32 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சலா அப்தே சிலாம், மவுனம் காத்து வந்தான். போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், சலா அப்தே சிலாமை பாரீஸ் தாக்குதல் வழக்கை சந்திப்பதற்காக பிரான்சுக்கு நாடு கடத்துவதற்கு பெல்ஜியம் அதிகாரிகள் நேற்று திடீரென முடிவு எடுத்து ஒப்புதல் வழங்கினர்.

இதற்கு அவன் சம்மதம் தெரிவித்து விட்டதாக அவனது வக்கீல் தெரிவித்தார்.

சலே அப்தே சிலாம், 10 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவான் என்று பெல்ஜியம் நீதித்துறை மந்திரி ஜீன் ஜாக்குஸ் உர்வாஸ் தெரிவித்தார்.

Comments
Loading...