Designed by Iniyas LTD
மகிந்தவுக்கு எதிராக விரைவில் விசாரணை!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை மிகவும் மந்த கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணைகள் இன்னும் நிறைவுப் பெறாமல் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் பேசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது