தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கிரான்குளத்தில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கல்முனை பகுதியிலிருந்து சென்ற  பாரவூர்தியொன்று ம் மட்டக்களப்பு பகுதியிலிருந்து  சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் இடையில்  திடீரென மாடு ஒன்று  குறுக்கிட்டதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில்  மோட்டார் சைக்கிளில் சென்ற  இளைஞன் பலத்த காயங்களுக்குள்ளாகி ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மேலும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...