தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மட்டக்களப்பில் வீதி விபத்தில் ஒருவர் பலி!

Untitledமட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி ஸ்ரீ பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி விபத்தில் உயிரிழந்தவர் காத்தான்குடி கபுறடி வீதியைச் சேர்ந்தவரும், முன்னாள் காத்தான்குடி 01, ஸாவியா பள்ளிவாயல் பேஷ் இமாமுமான மௌலவி ஆதம்லெப்பை பஹ்ஜியும் ஆவார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் தாஜ் ஹோட்டல் முன்பாக இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கல்முனை திசையை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் வந்த மேற்படி மௌலவியின் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த மௌலவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாகன சாரதி காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Loading...