தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மதமாற்றங்கள் அபாயமானவை! தமிழாசிரியர் லோகேஷ்

logesh
சமயம் மக்களின் வாழ்வியலின் அடிப்படை என்று தெரிவித்துள்ளார் கிளிநொச்சியை சேர்ந்த பிரபல தமிழாசிரியர் லோகேஷ்வரன். சமயமும் வாழ்வும் என்ற தொனி தலைப்பில் கிளிநொச்சி சாந்தபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் நேற்று சிவராத்திரி விரத நிகழ்வில் சொற்பொழிவு ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மதமாற்றங்கள் மக்களின் வாழ்வியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துபவை என்று தெரிவித்த லோகேஷ்வரன் எமது மதமும் வாழ்வுமே எமது அடையாளங்கள் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் சமயம் ஒவ்வொரு மனிதனையும் உரிய நெறிப்படி வாழ வாழி காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

மத மாற்றங்கள் அபாயகரமான விளைவுகளை உண்டுபண்ணுபவை என்று தெரிவித்த லோகேஷ்வரன் விரதம் உள்ளிட்ட சமயத்தின் நெறிமுறைகள் வாழ்வின் ஒழுங்கை தீர்மானிப்பவை என்றும் கூறினார். அத்துடன் மனிதன் வாழ்வின் செயற்பாடுகளை உரிய ஒழுங்கின்படி வாழ்வது சமய நெறியின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் கூறினார்.

சாந்தபுரம் கிராமத்தில் வறுமை மற்றும் பின்தங்கிய நிலமையை மையப்படுத்தி சுதேச மதங்களிலிருந்து மக்களை மதமாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...