தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னார் கால்பந்தாட்டத் தொடர்

மன்னார் கால்பந்தாட்ட லீக்கும் ஜோசவாஸ்நகர் யுனைற்ரெட் விளையாட்டுக்கழகமும் இணைந்து மின்னொளியில் நடத்தும் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் சில இன்று சனிக்கிழமை ஜோசவாஸ்நகர் யுனைற்ரெட் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இரவு 6.30 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் மூன்றாம்பிட்டி சென்.அன்ரனிஸ் அணியை எதிர்த்து ஜோசவாஸ்நகர் யுனைற்ரெட் விளையாட்டுக் கழக அணி மோதவுள்ளது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் விடத்தற்தீவு ஐக்கிய அணியை எதிர்த்து றீகன்ஸ்ரார் அணி மோதவுள்ளது.    foot

யங்ஸ்ரார் வி.கழகத் தொடர்

வவுனியா வைரவப் புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழகம் வவுனியா கால்பந்தாட்ட லீக்கில் அங்கம் வகிக்கும் அணிகளுக்கு இடையில் சாந்தன், யூட், கயன் ஞாபகார்த்த கிண்ணத்துக்காக நடத்தும் லீக் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் வவுனியா வைரவப் புளியங்குளம் யங்ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் யங்ஸ்ரார் “ஏ’ அணியை எதிர்த்து அல் மதீனா அணி மோதவுள்ளது.

வைகறை வி.கழகத் தொடர்

யாழ். மாவட்ட தாச்சிச் சங்கத்தின் அனுமதியுடன் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழகம் மின்னொளியில் நடத்தும் தாச்சித் தொடரின் ஆட்டங்கள் புதுமடம் வைகறை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்டத்தில் இணுவில் அண்ணா அணியை எதிர்த்து தென்றல் அணி மோதவுள்ளது.

Comments
Loading...