Designed by Iniyas LTD
மறைந்த மன்னார் ஆயருக்கு கவி மழையால் காணிக்கை – சிறப்பு கவிதை
ஆண்டவர் அனுப்பிய
இறைதூதர்களாகவே
அன்பினால் இவ்வுலகை எத்தனைபேர் ஆளுகை புரிந்திருக்கிறார்கள்?
துயர்களைக்கண்டு துடிதுடித்து,
அவை வெல்லத் தமையே துறந்து, வியர்வையும் குருதியும் எமக்காகச்சொரிந்து எத்தனைபேர் எம்மிடை வாழ்ந்துபோயிருக்கிறார்கள்…?
அப்படியொருவர் எம்மோடிருந்தார்,
அத்தனை துயர்களையும் எம்மோடு
கூடவே சுமந்தார்…
அயராதுழைத்தபடி எங்களுக்காகவே துணிவோடு கூடவும் நடந்தார்…
வாயாரப்புகழும் பெருமைகளையெல்லாம்
விரும்பாத பேராயர் ஒருவர் எம்மிடையே வந்துபோயிருக்கின்றார்…!
ஆம், நாம் தாண்டமுடியாத தடைகளையெல்லாம் தாண்ட நினைத்தபோதெல்லாம் எமைத் தாங்கிப்பிடித்த ஆண்டகையொருவர் எம்மிடையே வாழ்ந்துபோயிருக்கின்றார்!
இறைவனின் தூதர்கள் எப்போதும்
எத்தகைய வரையறைக்குள்ளும் அடங்கமாட்டார்…!
கரைகாணமுடியா அன்புவெள்ளத்தில்
இவ்வுலகை நித்தமும் அவர் நிறைகொண்டிருப்பார்…!
வாசப்பூக்களெல்லாம் வழிநெடுகப் பூத்திருந்து, எம் ஜோசப் ஆண்டகையை வழியனுப்பிவைத்துவிட்டு, எம் தேசப்பூக்களாம் காந்தள் மலர்களொடு,
உயிர்த்த ஞாயிறில் மீண்டொரு உலகேற்ற,
உத்தமர் வரும் திசைநோக்கி
உயிர்ப்போடு பூத்திருக்கும்!
-காந்தள்-