தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலிங்கவின் கருத்தால் உடன் நாடு திரும்ப உத்தரவு!

imagesஇலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க எக்­கா­ரணம் கொண்டும் ஐ.பி.எல். போட்­டி­களில் விளை­யா­ட­மு­டி­யாது என்றும் அவரை உட­ன­டி­யாக நாட்­டுக்குத் திரும்­பு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் செய­லாளர் மொஹான் டி சில்வா தெரி­வித்தார்.
காயம் கார­ண­மாக ஆசியக் கிண்ணம் மற்றும் இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடர்­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருந்த லசித் மலிங்க, தனது உடற்­த­கு­தியை இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் வைத்­தி­யர்­க­ளிடம் நிரூ­பித்த பின்னர் அவர்­க­ளினால் விடுக்­கப்­ப­டும் அறி­வித்­த­லுக்குப் பின்­னரே அவர் ஐ.பி.எல். தொடர்­களில் கலந்­து­கொள்ள முடியும் என்று இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால அண்­மையில் தெரி­வித்­தி­ருந்தார்.
எமது அனு­ம­தி­யில்லாமல் எவ்­வித போட்­டி­க­ளிலும் அவர் கலந்­து­கொள்ள முடி­யாது என்றும் அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் மும்பை இந்­தியன்ஸ் அணியில் இடம்­பெற்­றுள்ள லசித் மலிங்க இந்­தியா புறப்­பட்டு சென்­றுள்ளார். இது­கு­றித்து இலங்கை கிரிக்கெட் நிறு­வன செய­லாளர் மொஹான் டி சில்­வா­விடம் நாம் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,
இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் அவரை வலு­கட்­டா­ய­மாக அணியில் இணைத்­த­தாக லசித் மலிங்க ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்தார். அது குறித்து ஒழுக்­காற்று விசா­ரணை நடத்­து­வ­தற்­காக அவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.
அப்­போது அவர் தனது காயத்­திற்கு ஆயுர்­வேத மருத்­துவம் செய்­து­வ­ரு­வ­தா­கவும் உட­ன­டி­யாக அவரால் விளக்­க­ம­ளிக்க வர­ மு­டி­யாது என்றும் 3 வாரங்கள் கழித்து வந்து விளக்­க­ம­ளிப்­ப­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் அவர் திடீ­ரென எமக்கு அறி­விக்­காமல் இந்­தியா சென்­றுள்ளார்.
அதனால் அவர் உட­ன­டி­யாக நாட்­டுக்கு திரும்ப அழைக்­கப்­பட்­டுள்ளார். விசாரணைகளில் பங்குகொள்வதாகவும் அவரும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அப்­ப­டி­யானால் ஐ.பி.எல். தொடரில் லசித் மலிங்க விளை­யா­டு­வாரா என்று கேட்­ட­தற்கு, இல்லை முடி­யாது. இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னத்தின் அனுமதியில்லாமல் அவர் எந்தப் போட்டியிலும் விளையாடமுடியாது.
அவரின் உடற்தகுதியை நாம் ஆராய்ந்த பின்னரே அவருக்கான அனுமதியை வழங்குவோம் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

Comments
Loading...