தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலேசியாவிலும் ஆதார் சிஸ்டம்…..

மலேசியாவிலும் ஆதார் சிஸ்டத்தை கொண்டு வர அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவுக்கு  சென்று  ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற நிலை இந்தியாவில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் ஆதார் முறையை பின்பற்றுவதற்கு மலேசிய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அங்கு அரசின் திட்டங்கள், உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவற்றுக்கு ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி மலேசியாவுக்கு சென்ற போது, ஆதாரை கொண்டு வருவது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் மஹாதிர் முகமது ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் தொடர்ச்சியாக மலேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் குலசேகரன் தலைமையிலான குழு அந்நாட்டு உயரதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த வாரம்  சென்றுள்லதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது

இதுகுறித்து மலேசிய மனிதவள அமைச்சர் குலசேகரன் கூறுகையில்,

ஆதார் முறையை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளை நாங்கள் சந்தித்துள்ளதாகவும், தங்கள் நாட்டில் ஆதாருக்கு பதிலாக மைகாட் (MyKad) முறையை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும்,

இதனை நடைமுறைப்படுத்தினால் போலிகள் ஒழிக்கப்பட்டு அரசுக்கு செலவு மிச்சமாகும். என கூறியுள்ளார்.

Comments
Loading...