Designed by Iniyas LTD
மலேசியாவில் அகதிகளின் புதைகுழி கண்டுபிடிப்பு!
மலேசியாவின் 139 இடங்களில் அகதிகளின் உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மே 11 ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தாய்லாந்தின் எல்லையை ஒட்டியுள்ள மலேசிய பகுதிகளில் நடத்திய சோதனையில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறைத் தலைவர் காலித் அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கவலை தெரிவித்துள்ள மலேசிய பிரதமர், ஆள்கடத்தலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார்.