தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மஹிந்தைக்கு வாக்கு போட மக்களை எச்சரிக்கும் பிள்ளையான் குழு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு மட்டக்களப்பில் சிவனேசதுறை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) ஆதரவாளர்கள் சிலர் வாக்காளர்களை அச்சுறுத்தியுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார். இதனால் இப்பகுதியில் சிறிபதற்ற நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.jaffna_k_2

இதேவேளை யாழ். பருத்தித்துறை நாவலடி ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு 800 மீற்றருக்கு அப்பால் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த வாக்களிப்பு நிலையத்தில் தற்போது பாதுகாப்பான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெறுவதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது.

ஹப்புத்தளை – ஹல்துமுல்லை பிரதேசத்தில் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிலர் ஐக்கிய மக்கள் முன்னணி ஆதரவாளர்களுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டுள்ளதாக கபே அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. அத்தோடு கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதிகளிலும் இன்று காலை தேர்தல் விதிமுறைகளை மீறிய சம்வங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...