தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மாங்குளத்தில் வீதி விபத்து! தாய் பலி மகன் படுகாயம்

untitledமாங்குளம்  பகுதியில் இன்று 13.09.2016 காலை 10.20மணியளவில் இடம்பெற்ற டிப்பர்- மோட்டார் சைக்கில் விபத்தில் மோட்டார் சைக்கிலினை செலுத்தி வந்த தாய் சம்பவ இடத்தில் பலியானதுடன் அவரின் மகன் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று மாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிலில் சென்ற வன்னிவிளாங்குளம், அம்பாள்புரத்ததைச்சேர்ந்த ரவிக்குமார் இன்பமலர் தாயார் சம்பவ இடத்தில் மரணமடைந்ததுடன் அவரது மகனான ரவிக்குமார் கீதன் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.

Comments
Loading...