Designed by Iniyas LTD
மாணவன் மீதான தாக்குதலுக்கு எதிராக வரும் சனிக்கிழமை கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்…
கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சனிக்கிழமை காலை 9 மணிக்கு டிப்போச் சந்தியிலிருந்து ஆரம்பமாகவுள்ள இந்த கண்டனப் பேரணி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தினை சென்றடையவுள்ளது.
இதன்போது மாணவன்மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய கிளிநொச்சி பாடசாலை மாணவன் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த மாணவன் தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.