தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீனவர்கள் தொடர்பான அறிக்கை சுஷ்மா விடம்!

Untitled-1 copyஇந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் தொடர்­பாக விரி­வான அறிக்­கை­யொன்று இந்­தியவெளி­யு­றவு அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜி டம் கைய­ளிக்­கப்­படவுள்­ளது என இலங்கை கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­வீர தெரி­வித்தார்.

இப்­பி­ரச்­சினை தொடர்­பாக அமைச்சு மட்­டத்தில் எந்­த­வி­த­மான தனிப்­பட்ட பேச்­சுக்­களும் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார்.

இது தொடர்­பாக அமைச்சர் மஹிந்த சம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில்,

இலங்கை கடற்­ப­ரப்பில் அத்­து­மீறும் இந்­திய மீன­வர்கள் ரோலர்கள் மற்றும் தடை­செய்­யப்­பட்ட மீன் பிடி முறைகள் மூலம் இலங்கை கடற்­ப­ரப்பில் மீன் வளங்­களை அள்ளிச் செல்­வதும் இதன் மூலம் கடல் தாவ­ரங்கள் அழி­வதும் பாரிய பிரச்­சி­னை­யா­க­யுள்­ளன.

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலை எனது கண்­களால் நேரில் கண்டேன். இவ்­வாறு அத்­து­மீறும் தமி­ழக மீன­வர்கள் அப்­பா­விகள். அவர்கள் பயன்­ப­டுத்­திய பட­கு­களின் உரி­மை­யா­ளர்கள் தமி­ழக அர­சியல் தலை­வர்­களே ஆவார்கள்.

எனவே தான் தமி­ழ­கத்தில் மீன­வர்­களை தூண்­டி­விட்டு போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர்.

அத்து மீறி­யதால் கைப்­பற்­றப்­பட்ட மீன­வர்­களின் பட­குகள் எந்த அழுத்­தத்­திற்கும் பயந்து திருப்பி கைய­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது.

மீன­வர்கள் மனி­தா­பி­மா­னத்­துடன் விடு­தலை செய்­யப்­ப­டு­வார்கள்.

அதே­வேளை இப்­பி­ரச்­சினை தொடர்­பாக தமி­ழ­கத்­துடன் எந்­த­வி­த­மான பேச்­சு­வார்த்­தை­களும் நடத்­தப்­பட மாட்­டாது.

இலங்கை அர­சாங்கம் இந்­திய மத்­திய அமைச்­சு­ட­னேயே இவ்­வி­டயம் தொடர்­பாக பேச்­சு­வார்த்­தை­களை நடத்தும்.

இந்­திய மீன­வர்­களின் அத்து மீறல்­களால் எமது கடல் வளம் அழிக்­கப்­ப­டு­வ­தோடு வட­ப­குதி எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.

இவையனைத்தும் அடங்கிய முழுமையான அறிக்கை ஒன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கையளிக்கப்படவுள்ளது என்றார்.

Comments
Loading...