Designed by Iniyas LTD
முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் 35 க்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது
நாட்டில் முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் 35 வயதிற்கு க்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதனை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பிலான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் முச்சக்கர வண்டி செலுத்தும் சாரதியின் வயது 35 ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த விடயம் தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.