Designed by Iniyas LTD
முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும்: வெங்கய்யா நாயுடு
முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது முத்தலாக் முறை என்பது ஒரு தனிப்பட்ட விசயம் இல்லை. இது பெண் சமூகத்திற்கான நீதி சம்பந்தப்பட்டது. எல்லா பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும்.
சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள். குழந்தை திருமணம், சதி மற்றும் வரதட்சணை போன்ற இந்து சமுதாயத்தில் இருந்த சில மூடப்பழக்கங்களை அகற்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதுபோல் முத்தலாக் முறையில் மாற்றம் செய்ய முஸ்லிம் மதத்தினர் முன்வர வேண்டும். இல்லையெனில் முத்தலாக் தடைக்கு அரசு சட்டம் கொண்டுவர நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.