தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மும்பை அணிக்கு பதிலடி கொடுக்குமா பெங்களூரு அணி!

201605110919197644_Royal-Challengers-Bangalore-Mumbai-Indians-clash-today_SECVPFபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த பெங்களூரு அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே 7 விக்கெட் வித்தியாசத்தில் புனேவையும், ஒரு ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியையும் வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் பெங்களூரு அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

பெங்களூரு அணியில் பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி (561 ரன்கள்) நல்ல பார்மில் இருக்கிறார். டிவில்லியர்ஸ் கடந்த லீக் ஆட்டத்தில் நல்ல நிலைக்கு திரும்பினார். லோகேஷ் ராகுல், ஷேன் வாட்சன் ஆகியோர் நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஷேன் வாட்சன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். மற்ற பவுலர்கள் ரன்னை வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்கி வருகிறார்கள். பந்து வீச்சு பலம் பெற்றால் பெங்களூரு அணி வலுப்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக 3 லீக் ஆட்டங்களில் வெற்றியை தனதாக்கிய மும்பை அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 85 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. அந்த தோல்வியை மறந்து வெற்றி பாதையில் பயணிக்க மும்பை முனைப்பு காட்டும்.

முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தது. அந்த ஆதிக்கத்தை இந்த ஆட்டத்திலும் தொடர மும்பை அணி முயற்சி மேற்கொள்ளும். அதே நேரத்தில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எஞ்சிய ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என்பதால் பெங்களூரு அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Comments
Loading...