தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லைத்தீவு மனித எச்சங்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று கூறுகின்றார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய .

mannar grave

முல்லைத்தீவு உடையார்கட்டு, மூங்கிலாறு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களுக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்று சிறீலங்கா படைதரப்பு தெரிவித்துள்ளது.

சிறீலங்கா படை பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடையாரகட்டு மூங்கிலாறு பகுதியில் விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை உழுத போது  9 மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இந்த எச்சங்கள் தங்களால் கொலை செய்யப்பட்டவர்களுடையது என்று சிலத் தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக எமக்கு எதுவும் தெரியாது இந்த மனித எச்சங்களுக்கும் எமக்கும் இடையில் எந்த வகையான தொடர்பும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப்பகுதியெங்கும் இறுதிப்போருக்கு பின்னர் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதும் தோண்டப்படுவதும் தொடர்ந்தவண்ணமுள்ளது தமிழ்மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை விளைவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனவர்கள் மீண்டும் வருவார்களா இல்லையா என்ற கேள்விகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்உறவுகள் இந்த புதைகுழிகளால் பெரிதும் வேதனையடைந்துள்ளனர்.

Comments
Loading...