Designed by Iniyas LTD
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10118 குடும்பங்களை சேர்ந்த 32551 அங்கத்தவர்கள்பாதிப்பு..
கடந்த மாதம் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஏற்பட்ட மொத்த இழப்பீடுகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை 10118 அங்கத்தவர்கள் 32551பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் உட்கட்டுமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன
நெற்பயிர் செய்கை 20146.5 ஏக்கர் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன நிலக்கடலை 3849ஏக்கர் சேதமடைந்துள்ளன உளுந்து பயறு போன்றனவும் முழுமையாக சேதடைந்துள்ளன மரக்கறி பயிர்செய்கை 498 ஏக்கர் சேதமடைந்துள்ளன.
கால்நடைகளும் உயிரிழந்துள்ளன மாடுகள் 3012 எருமை மாடுகள் 418 ஆடுகள் 912 ஆடுகள் கோழிகள் 6895 முழுமையாக இறந்துள்ளன இதனை நம்பியுள்ள விவசாயிகள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளார்கள் கால்நடைகளின் கொட்டில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மேச்சல் தரவைகளும் சேதமடைந்துள்ளன.
மீன்பிடித்துறையில் கடற்தொழிலில் ஈடுபடுகின்ற 15 படகுகள் தொலைந்துள்ள 187 வலைகள் காணாமல் போயுள்ளன நன்நீர் மீன்பிடியில் ஈடுபடுகின்றவர்களின் படகுககள் 07ம் 37 வலைகளுகம் காணாமல் போயுள்ளன.
நன்னீர் மீன்பிடிக்காக மீன்குஞ்சுகள் குளங்களில் விடப்பட்டன அவைகளும் வெள்ளநீரினால் அடித்து செல்லப்ட்டுள்ளன. மீண்டும் குளங்களில் மீன் குஞ்சுகள் விடவேண்டிய தேவைஉள்ளது.
86 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன 2297 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதிகளும் கட்டுமானங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கான வீதிகள் 84.2 கிலோமீற்றர் வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன 29 கால்வாய்கள் பாதிக்கப்பட்டுள்ள 03விவசாய வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன
பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மாந்தை கிழக்கில் 39 வீதிகளான 36.5 கிலோமீற்றர் வீதிகளும் துணுக்காய் பிரதேச சபைக்கு உட்பட்ட30.9 கிலோமீற்றர் வீதிகளும் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட 119.8 கிலோமீற்றர் வீதிகளும் பாலங்கள் கல்வெட்டு போன்ற 60ற்கு மேற்பட்டவை பாதிக்கப்ட்டுள்ளது ,கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட 82 வீதிகள் 93.25 கிலோமீற்றர் வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீர்பாசன திணைக்களத்திற்கு உரிய 20 குளங்களில் குளங்கள் மட்டுமல்ல குளங்களுக்கு கீழான கட்டுமான பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கமநல அபிவிருத்திதிணைக்களத்திற்கு கீழான பத்து சிறுகுளங்கள் பாதிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் சிறுசிறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.