Designed by Iniyas LTD
மூன்றாவது நாளாக மீன்பிடிக்க தடை: வெறிச்சோடியது ராமேஸ்வர துறைமுகம்
கடல் சீ
ற்றம் காரணமாக மூன்றாவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரத்தில் துறைமுகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்களுக்கு கடந்த 9ஆம் தேதி முதல் மீன்பிடி அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்பட்டது.
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்த பின்னும் காற்று தொடர்ந்து வேகமாக வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் மீன்பிடிக்க இன்றும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடல்சீற்றம் மற்றும் புயல் காலங்களில் படகுகளை பாதுகாக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்த துறைமுகம் அமைத்துத்தர வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆபத்துக்காலங்களில் துறைமுக அதிகாரிகளோ மீன்வளத்துறை அதிகாரிகளோ போதிய அறிவிப்பு வழங்குவதில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.