தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெக்சிகோவில் திடீரென வெடித்துச் சிதறியது கொலிமா எரிமலை!

mexico-volcanoகொலிமா எரிமலை வெடித்து சிதறியதால், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர். மெக்சிகோ நாட்டின் வடமேற்கு பகுதியில் கொலிமா எரிமலை உள்ளது. இந்த எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையுடன் காட்சியளிக்கிறது. வெடித்து சிதறிய எரிமலையில் இருந்து லாவா வெளியேறி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களான லா யெர்பாபுனே மற்றும் லா பெக்கெர்ரா ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Comments
Loading...