தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மே தினத்தில் ஆறு கோரிக்கைகளை முன் வைத்துள்ள மாணவர்கள்!

உதி­ரத்­தையே உழைப்­பாக்கி உல­கத்­தையே உய்­விக்­கும் உழைப்­பா­ளர் பெருந்­த­கை­களை மேதின நன்னா­ளில் நாமும் தலை­வ­ணங்கி நிற்­கின்­றோம். இவ்­வாறு யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக முகா­மைத்­து­வக் கற்­கை­கள் மற்­றும் வணி­க­பீட மாண­வர்­கள் மே தினச் செய்­தியை விடுத்­துள்­ள­னர்.
அவர்­கள் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,
உல­குக்­கான உணவு, உடை, உறை­யுள் உள்­ள­டங்­கிய அனைத்­தை­யும் நீங்­களே வழங்­கு­ கின்­றீர்­கள். ஆனால் உங்­க­ளது தேவை­கள் மட்­டும் நெடுங்­கா­ல­மா­கப் பூர்த்தி செய்­யப்­ப­டா­மலே உள்­ளன. அர­சி­யல்­வா­தி­கள் தொடக்­கம் முத­லாளி வர்க்­கம் வரை­யும் உங்­கள் உழைப்­பைத் தங்­கள் இலா­ப­மா­க­வும், அதி­கா­ர­மா­க­வும் மாற்றி ஆடம்­ப­ர­மாக வாழும் பொறி­மு­றை­யைத் தத்­ரூ­ப­மாக உரு­வாக்கி வாழ்­கின்­ற­னர்.
நீங்­கள், கர­டு­மு­ர­டான வாழ்க்­கையை வாழ்ந்து வாழ்­நாளை கழித்­து­வ­ரு­கி­றீர்­கள். ஒவ்­வொ­ரு­மு­றை­யும் தொழி­லா­ளர் உரி­மைக்­காக நடத்­தப்­ப­டும் மேதி­னம் தேர்­த­லுக்­கான வாக்­குச்­சே­க­ரிப்­பின் முன்­னோட்­ட­ மா­கவே நடத்­தப்­ப­டு­கின்­றது. தொழி­லா­ளர்­க­ளா­கிய நீங்­கள் விழித்­துக்­கொள்­ளும் வரை உங்­கள் உரி­மை­க­ளை விட்­டுக் கொ­டுக்­கா­மல் வாழும்­வரை இந்­த­நிலை தொடர்ந்­து­கொண்டே இருக்­கும்.
உங்­கள் உரி­மைக்­கான இந்த நாளில் உங்­க­ளது சுபீட்ச வாழ்­வுக்­காக பிரார்த்­திப்­ப­தோடு சில கோரிக்­கை­க­ளை­யும் முன்­வைக்­கின்­றோம்.
 1. தமி­ழர் உரி­மைக்­கான நிரந்­தரத் தீர்வு கால இழுத்­த­டிப்­பின்றி வழங்­கப்­ப­ட­வேண்­டும்.
2. ஆக்­கி­ர­மிப்புக்குட்­பட்­டி­ருக்­கும் நிலங்­கள் மற்­றும் கடற்­ப­ரப்­புக்­கள் விடு­விக்­கப்­பட்டு விவ­சா­யம், மீன்­பிடி மற்­றும் இதர தொழி­லா­ளர்­க­ளின் தொழில்­கள் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும்.
3. பல்­க­லைக்­க­ழக கல்­வி­மு­றை­கள், தொழில்­சார் கல்­விக் கட்­ட­மைப்­பாக மாற்­றப்­ப­ட­வேண்­டும்.
4. அர­சி­யல் நன்­மை­க­ளுக்­காக தகு­தி­யற்­ற­வர்­க­ளுக்­குத் தரப்­ப­டும் வேலை­வாய்ப்­பு­கள் பட்­ட­தா­ரி­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வேண்­டும்.
5. வடக்கு – கிழக்கு கடற்­பி­ராந்­தி­யங்­க­ளில் தெற்கு மீன­வர்­க­ளின் பிர­சன்­னம் தவிர்க்­கப்­ப­ட­வேண்­டும்.
6. அர­சி­யல் மற்­றும் அதி­கா­ரப்­பி­ர­யோ­கத்தைப் பயன்­ப­டுத்தி வடக்கு, கிழக்­கில் இடம்­பெற்­று­வ­ரும் அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்­கள் உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­டல் வேண்­டும்-­– என்­றுள்­ளது.
Comments
Loading...