Designed by Iniyas LTD
யாழில் இருந்து வவுனியா சென்ற பேருந்தில் இருவர் கைது…
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது
வவுனியா – தாண்டிக்குளம் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் குறித்த பேருந்தை சோதனையிட்டபோதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 634 கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தளை – கலுதாவல மற்றும் கிளிநொச்சி – பாரதிபுரம் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.