தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான 5 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி…

யாழ் இணுவிலில்  தந்தையின் தாக்குதலுக்கு உள்ளான 5 வயது மகன் தெல்லிப்பழை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதை தலைக் கேறிய  நிலையில் தந்தை  சிறுவனைக் கடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சிறுவனின்  கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து .  சிறுவனின் தந்தையை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசரணைகளி்ன் பின்னர்  அவரை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Comments
Loading...