தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது

யாழில்  இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் அடாவடித் தனங்கள் தொடர்பில்  இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக  யாழ்பிராந்திய பொலிஸ் நிலையங்களின் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று   தொடக்கம் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்ப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந்த  கட்டளையை வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, சகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாள்வெட்டு சம்பவம்


 கடந்த ஞாயிற்றுக்கிழமை   மூன்று வீடுகளுக்குள் புகுந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு மற்றும் அடாவடித்தனங்களில் ஈடுபட்டதனால் , அங்கு  இருந்த பெறுமதியான பொருட்கள்  சேதம் அடைந்தது. 

அதோடு  கொக்குவில் முதலி கோவிலடியில் ஆவா கும்பலைச் சேர்ந்த ஒருவரால் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றும்  இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவரும் இதுவரை  கைது செய்யப்படவில்லை. 

இந்நிலை தொடர்ந்தால் அடங்கி இருந்த வாள்வெட்டுக் கும்பல்கள் மீளவும் அடாவடிகளில் ஈடுபடுமென வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Comments
Loading...