தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் மகளை தீமூட்டி எரித்துக் கொன்ற கொடூர தந்தை!

downloadயாழ்ப்பாண அளவெட்டியில் தந்தையால் தீ மூட்டப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சிபெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்ததுடன், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அளவெட்டி மத்தியைச் சேர்ந்த குடும்பமொன்றின் ஒரே பெண் பிள்ளையான திருவிளங்கம் ஜெனனி என்ற 27 வயது யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்ததாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த யுவதி தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறும் போது பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்படி தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...