தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் மக்கள் மீது இராணுவம் திடீர் சோதனை! மீண்டும் போர்ப்பயிற்சி?

iranuvamm1-680x365யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் (ஏ -32 வீதி) பூநகரி, மண்டைக்கல்லாறு பகுதியில் இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கையை இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மேற்கொண்டனர்.

பஸ்கள் தவிர்ந்து ஏனைய வாகனங்கள் மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டதுடன் அதில் பயணித்தவர்கள் உடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, ஆள் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டதுடன், அவர்களின் உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

சோதனை இடம்பெற்ற இடத்துக்குச் சற்றுத்தொலையில் இராணுவத்தினர் சிலர் பயிற்சிகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

நீண்டகாலத்துக்கு பின்னர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Comments
Loading...