Designed by Iniyas LTD
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிஸாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்..
யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரும் பொலிஸாரும், இணைந்து வீடு வீடாகத் தேடுதல்களை நடத்த ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது படையினர் வீடுகளின் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும், அடையாள அட்டை தொடர்பான பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் அச்சுவேலி, பத்தமேனி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினா இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதேவேளை படையினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், பதிவுகளால் குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.