Designed by Iniyas LTD
யாழ் கொடிகாமத்தில் இராணுவ வீரர் என கூறி பணமோசடியில் ஈடுபட்ட நபர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு…
யாழ் கொடிகாமத்தில் இராணுவ வீரர் என கூறி பணமோசடியில் ஈடுபட்ட முஸ்ஸீம் நபர் கொடிகாமம் பொலிஸாரிடம் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் கொடிகாமத்தில் உள்ள இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர் என கூறி வர்த்தக நிலையங்களில் குறித்த நபர் நிதி சேகரித்துள்ளார்.
தமது இராணுவ முகாமில் சித்திரை வருடப்பிறப்பு தினத்தில் நிகழ்வு ஒன்று நடை பெறவுள்ளதாகவும் அதற்காக நிதி சேகரிப்பாதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த நபர் சிங்கள மொழியிலான கடிதம் ஒன்றை காண்பித்தே மக்களிடம் நிதி சேகரித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
