தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ்.சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் வெடிமருந்து  மீட்ட விசேட அதிரடிப் படையினர்..

யாழ்.சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் வெடிமருந்து  மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று   இரவு யாழ்ப்பாணம்- கொழும்புத்துறை சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்திலிருந்து குறித்த வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ நிறையுடைய சி4 வெடிமருந்து 7 பொதிகள் மற்றும் டெனேட்டர் என அழைக்கப்படும் வெடி மருந்திற்குப் பயன்படுத்தப்படும் 4 குழாய்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியிலுள்ள மீனவர்கள், மீன்பிடிக்க எடுத்து செல்வதற்காக இந்த வெடிமருந்துகளை வைத்திருக்கலாமெனவும்   அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட, வெடிபொருட்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை யாழ்.பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை  கடந்த மாதமும் குறித்த பேருந்து தரிப்பிடத்திலிருந்து, ஒரு தொகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.

Comments
Loading...