தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் நீதிமன்ற தாக்குதலில் கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் முன்னால் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதானவர்களில் 45 பேர் இன்று யாழ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.corts

இந்தக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 20 ஆம் திகதி 130 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் மேலும் இருவர் சந்தேகத்தின் பேரில் பின்னர் கைது செய்யப்பட்டனர். 45 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு பிணையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நான்கு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியிருந்தனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட 132 சந்தேக நபர்களில் மேலும் ஒரு தொகுதியினர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...