Designed by Iniyas LTD
யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது…
யாழ் வடமராட்சி பருத்தித்துறையில் நேற்றைய தினம் 4 கிலோ 200 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டபோதே குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காங்கேசன்துறைக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கஞ்சா கடத்தப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, பருத்தித்துறை குடத்தனை பொற்பதியில் உந்துருளி மடக்கிச் சோதனையிடப்பட்டது.
இதன்போது பொதி செய்யப்பட்ட நிலையில் இருந்த கைஞ்சாவை கைப்பற்றிய பொலிஸார் உந்துருளியில் சென்றவரையும் கைதுசெய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர் பருத்தித்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விற்படைக்காக குறித்த கஞ்சா கொண்டுசெல்லப்பட்டதாக விசாரண்யில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.