தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் பல்கலைகழகத்திலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை…

நாட்டில் இடம்பெற்ற தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்பட்டுத்தப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி போன்ற்றன பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் நேற்றுச் சோதனையிடப்பட்டுள்ளது.

கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சென்ற இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்கலைகழக வளாகத்துக்குள் உள்நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே ஊழியர்கள் வளாகத்துக்குள் உள்நுழைய அனுமதிக்கபட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...