Designed by Iniyas LTD
ரஷ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு நோட்டீஸ்
இலங்கை விமானப் படைக்காக மிக் விமான கொள்வனவில் மேற்கொண்ட நிதி முறைகேடுகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ரஷ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு அடுத்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடிச் சம்பவம் ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக் விமான ஒப்பந்தம் மற்றும் நிதி முறைக்கேடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய புள்ளியாக உதயங்க வீரதுங்க இருந்தாலும், தற்போது இவர் உக்ரைனில் வாழ்ந்து வருவதால் இலங்கை அரசாங்கத்தினால் விசாரணைகள் மேற்கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் சட்டமூலங்கள் அடிப்படையில் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இவரை கைது செய்ய அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.