தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ராஜபக்சவால் திணிக்கப்பட்ட ஏஜண்ட் சுவாமி – வைகோ

தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சுவாமியை யாருமே கண்டிக்கவில்லை. பாஜகவில் யாருமே அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே. அவரது பேச்சை தமிழிசை செளந்தரராஜன் ஏற்கிறாரா என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கேட்டுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ இதுதொடர்பாக மேலும் கூறுகையில்,

அந்த மனிதர் பெயரை (சு. சுவாமி) உச்சரிக்கக் கூட விரும்பாதவன் நான். ராஜபக்சவால் திணிக்கப்பட்ட ஏஜண்ட்தான் சுவாமி.vaiko

அவர், ராஜபக்சவின் ஏஜண்டாக இராணுவ ஆலோசனை மாநாட்டுக்கு அனுப்பபட்டதும் கொலைகார ராஜபக்சவுக்கு பாரத ரத்னா பட்டம் கொடுக்க வேண்டும் என்றதும், படகுகளை பிடிக்கும் படி நான் தான் சொன்னேன் என்பதும், மீனவர்களை நான் தான் விடுவிக்க சொன்னேன் என்பதும் உங்கள் மவுத் பீசாக ஊதுகுழலாக பேசுகிறார் சுப்பிரமணிய சுவாமி.

நான் கேட்கிறேன் பிரதமர் நீங்களா சுப்பிரமணிய சுவாமியா. இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கூறிய சுவாமியை ஏன் ஒருவரும் கண்டிக்கவில்லை.

சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் என்.டி.ஏ வை விட்டு மதிமுக வெளியேற வேண்டும் அல்லது தூக்கி எறியப்படுவீர்கள் கெட் அவுட் என்கிறார்.

நான் கேட்கிறேன் பாஜக தலைவர் இவரா அமீத் ஷாவா.

டுவிட்டரில் என்னை மிரட்டியவர் வீட்டை மதிமுக தொண்டர்கள் முற்றுகையிட உள்ளதாகவும் அப்படி நடந்தால் சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி சகோதரி ஜெயலலிதா ஜாமீனை ரத்து செய்து விடுவதாக கூறுகிறார்.

Comments
Loading...